காசாங்குளம் தூர்வாரி சீரமைக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

காசாங்குளம் தூர்வாரி சீரமைக்கப்படுமா?:   பொதுமக்கள் எதிர்பார்ப்பு

குளம் சீரமைக்கப்படுமா?

காசாங்குளம் தூர்வாரி சீரமைக்கப்படுமா?என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பட்டுக்கோட்டையில் நகராட்சி அலுவலகத்தின் எதிரில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் 400 ஆண்டுகள் பழமையான காசாங்குளம் உள்ளது. நகரின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மையப்பகுதியில் அமைந்துள்ள காசாங்குளத்தை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இக்குளத்தின் தென்கரையில் விநாயகர் கோவிலும், ராமர் மட்டமும், மேல்கரையில் சிவன் கோவில், பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில்களும் உள்ளன. குளத்தின் நான்கு கரைகளிலும் படித்துறைகள் உள்ளன. ஆனால் இந்த படித்துறைகள் இடிந்து மக்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. பெருமாள் கோவில் அருகில் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்துள்ளது.

மேலும் குளத்தின் சுற்றுச்சுவர்களில் செடி, கொடி, மரங்கள் உள்ளதால் சுற்றுச்சுவர்கள் நான்கு புறங்களிலும் பாதிப்புக்கு உள்ளாகி கிடக்கிறது. ராமர் மடத்தின் பின்புறம் உள்ள குளத்தின் சுற்றுச்சுவர் தடுப்புக் கம்பிகளும் மரம் விழுந்ததால் சேதம் அடைந்துள்ளன. குளத்தைச் சுற்றி நடை பயிற்சிக்காக போடப்பட்ட பேவர் பிளாக் கற்களும் பெயர்ந்தும், குளத்தின் கீழ்கரையில் உள்ள படிக்கட்டுகளும் மக்கள் பயன்படுத்தமுடியாத அளவிற்கு இடிந்து கிடக்கின்றன.

பட்டுக்கோட்டை நகரின் பெரும்பாலான மக்களின் பயன்பாட்டில் உள்ள பழமையான காசாங்குளம் கடும் வறட்சியினால் நீர் வற்றி தாமரையும், அல்லி செடிகளும் முளைத்து குளம் முழுவதும் படர்ந்துள்ளது. எனவே மழைக்காலம் தொடங்குவதற்குள் காசாங்குளத்தின் நான்கு கரைகளிலும் படித்துறைகளை புதுப்பித்துக் கட்டுவதுடன்,

குளத்தை தூர்வாரி, தூய்மைப்படுத்தி நீரைச் சேமித்து வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பட்டுக்கோட்டை நகர பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Tags

Next Story