ராசிபுரம் அருகே சிறுத்தை நடமாட்டமா?: வனத்துறையினர் கண்காணிப்பு
தேடுதல் வேட்டையில் வனத்துறையினர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தேங்கல்பாளையம் பிரிவு பகுதியில் MTS கார்மெண்ட் பின்புறம் விவசாயி நிலம் உள்ளது. இதில், மா, கொய்யா, சப்போட்டா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த விவசாய நிலத்தை கடந்து சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சிறுத்தை ? போன்ற விலங்கு ஒன்று ஓடியாதாக இரு சக்கர வாகன ஓட்டிகள் ராசிபுரம் வனத்துறையினருக் தகவல் கொடுத்தனர்.
இது சம்பந்தமாக தேங்கல்பாளையம் பிரிவு MTS கார்மெண்ட் பின்புறம் விவசாயி நிலத்தில், ராசிபுரம் வனவர் சக்திவேல் தலைமையிலான வனத்துறையினர் ஆய்வு செய்து காலடி தடத்தை எடுத்தனர். இது, 8 முதல் 10 செ.மீ., அளவு இருந்தது.
மேலும், தேங்கல்பாளையம் பிரிவில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று பொதுமக்கள், விவசாயிகளிடம் ஏதேனும் விலங்கு நடமாட்டம் இருக்கிறதா எனக் கேட்டறிந்தனர். மேலும், நாய், ஆடு, மாடு உள்ளிட்டவற்றை தாக்கியதா? எனவும் கேட்டறிந்தனர்.
அது போன்ற எந்த அசம்பாவிதமும் இல்லை என பொதுமக்கள், விவசாயிகள் தெரிவித்தனர். மேற்கண்ட விலங்கின் கால்தடம் புணுகு பூனை, காட்டுப் பூனை, சிறுத்தை பூனையாக இருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
கால் தட ஆய்வுக்கு பின்னரே அது எந்த மாதிரியான விலங்கு என தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து, அசம்பாவிதம் தவிர்க்கும் வகையில் ராசிபுரம் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.