மதுராந்தகம் நகராட்சி பூங்கா சீரமைக்கப்படுமா?
நகராட்சி பூங்கா
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு, ரங்கா நகர் பகுதியில், நுாலக கட்டடம் அருகே, நகராட்சி பூங்கா மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2012 - 13ல், 16 லட்சம் ரூபாய் மதிப்பில், தந்தை பெரியார் பூங்கா அமைக்கப்பட்டது. தொடர்ந்து, சுற்றுச்சுவர் அமைத்து, மரம், செடி, கொடிகள் என பூங்கா அமைக்கப்பட்டது. இப்பகுதிவாசிகள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும், இந்த பூங்காவை பயன் படுத்தி வந்தனர். இதையடுத்து, பூங்கா பராமரிக்கப்படாமல், ஓராண்டுக்கு மேலாக புதர் மண்டியும், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் உடைந்தும், நடைபாதை சேதமடைந்தும், பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. மேலும், பூங்காவுக்குள் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மது பாட்டில்கள் என, சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையில் உள்ளது. எனவே, பூங்காவை புதுப்பித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story