நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு

நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா? -  விவசாயிகள் எதிர்பார்ப்பு

நெல் அறுவடை பணிகள் 

தாராபுரம் பகுதியில் நெல் அறுவடை தற்போது துவங்கியுள்ளது. அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாராபுரம் பழைய அமராவதி பாசனத்தில் 8 ஆயிரத்து 800 ஏக்கரும் புதிய அமராவதி பாசனத்தில் 9 ஆயிரத்து 300 ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது . இந்த ஆண்டு பொதுப்பணித்துறையினர் அமராவதி அணை நீர்மட்டம் சற்றுகுறைவாக இருந்த போதிலும் பருவ மழை பெய்யும் மழை அமராவதி அணை நிரம்பி விவசாயிகளுக்கு தண்ணீர் வழக்கம் போல் விடுவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறினார்கள். இதை அடுத்து நெல் நடவு தாமதமாக நடைபெற்றது .

தற்போது அலங்கியம், கொளத்துப்பாளையம் ,தளவாய் பட்டினம், வீராட்சிமங்கலம் பகுதிகளில் நெல் அறுவடை இயந்திரம் மூலம் நடைபெற்று வருகிறது. சுமார் 25 சதவீத நெல் அறுவடை செய்யப்பட்டு நெல் சுத்திகரிக்கப்பட்டு வயல்களில் வைக்கப்பட்டுள்ளது . அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து அலங்கியம் பழைய அமராவதி பாசன வாய்க்கால் சங்கத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது. தற்போது அறுவடை செய்யப்பட்ட நெல்லை தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்து வருகின்றனர். அந்த நிறுவனங்கள் நெல்லை குறைந்த விலைக்கு வாங்கி வருகின்றனர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டால் மட்டுமே விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும். என விவசாயி இது குறித்து கலெக்டர் குறைதீர்க்கும் நாள்கூட்டத்திலோ கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது . கடந்த ஆண்டு அலங்கியம், நஞ்சியம்பாளையம் ,சத்திரம் ,கொளத்துப்பாளையம் ,செலாம்பாளையம் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்து பலனடைந்தனர். அதேபோல் உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை நுகர்வோர் வாணிப கழகத்தினர் தாமதம் இன்றி திறக்க வேண்டும் .அப்போது தான் விவசாயிகள் பலன் அடைவார்கள். இவ்வாறு ஈஸ்வரமூர்த்தி கூறினார்.

மாவட்ட நிர்வாகம் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story