பல்லாங்குழி சாலை சீரமைக்கப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு
சேதமடைந்த சாலை
புதுக்கோட்டை மாவட்ட விராலிமலை ஒன்றியம் ஆலங்குளத்தில் இருந்து ஏழுவம்பட்டிக்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை நாச்சிகுறிச்சி, சூரியூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பல்வேறு கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த சாலையில் ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இப்போது மழைக்காலம் என்பதால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியு மாக மாறிவிட்டதால் சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள், இருசக்கர வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியாவது காலம் தாழ்த்தாமல் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags
Next Story