தொழிற்சாலை அமைத்து தருவேன்; அதிமுக வேட்பாளர் உறுதிமொழி!

பொன்னமராவதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ், தொழிற்சாலை அமைத்து தருவேன் என பொதுமக்களுக்கு உறுதி அளித்தார்.

எந்த தொழில் வளர்ச்சியுமே இல்லாத பொண்னமராவதி பகுதிக்கு தொழிற்சாலை அமைத்து தருவோம் என உறுதி அளித்தால் தான் வாக்களிப்போம் என கோரிக்கை வைத்த பெண்கள் என்னை வெற்றி பெற வைத்தால் உறுதியாக செய்து கொடுப்பேன் என உறுதி அளித்த சிவகங்கை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ்சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் அதிமுக தெற்கு மாவட்ட கழக செயலாளர் வைரமுத்து தலைமையில் அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் வாக்குகள் சேகரித்தார்.

இதன் ஒரு பகுதியாக பொன்னமராவதி கடைவீதியில் அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் வாக்குகள் சேகரித்தார். அப்போது திடீரென அந்த பகுதி பெண்கள் பேசிய போது எந்த தொழில் வளர்ச்சியுமே இல்லாத இந்த பொன்னமராவதி பகுதியில் தொழிற்சாலைகள் அமைத்து தர வேண்டும் எனவும், இதே போல் அரசு கல்லூரிகள் அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இதற்கு அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் பதில் அளித்தபோது கண்டிப்பாக என்னை வாக்களித்து வெற்றி பெற செய்துவிட்டால் உடனடியாக உங்களது கோரிக்கையை ஏற்று இந்த பகுதிக்கு தொழிற்சாலைகள் அமைத்து தருவேன் என உறுதி அளித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story