சோளீஸ்வரர் கோவில் குளம் சீரமைக்கப்படுமா?
குளம் சீரமைக்கப்படுமா
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் உபகோவிலான ஆற்காடு குப்பம் சோளீஸ்வரர் கோவிலின் குளத்தின் படிகள், சுற்றுச்சுவர் உடைந்து உள்ளது. கடந்த 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் குளம் குபேரன் வழிபட்ட ஸ்தலம் என்பது வரலாறு.
காஞ்சி மகாபெரியவர் சந்தியாவதனம் செய்த இடமாகும். இந்த கோவில் குளத்தில் நீராடி சுவாமியை வழிபட்டால் நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் தீரும் என்பது ஐதீகம். எனவே இந்த கோவிலுக்கு வெளி மாவட்டங்கள்,
மாநிலங்களில் இருந்து பக்தர்கள் தினமும் வந்து செல்வர். கடந்த நான்கு ஆண்டுகளாக கோவில் குளத்தின் படிக்கட்டுகள், சுற்றுச்சுவர் உடைந்து உள்ளதால் பக்தர்கள் நீராட முடியாமல் திரும்பி செல்கின்றனர்.
இந்நிலையில், சோளீஸ்வரர் கோவில் திருக்குளத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.