பாஜ., தேசிய தலைவர்கள் தமிழகத்தில் போயிடுவார்களா?
பாஜ., தேசிய தலைவர்களுக்கு தைரியம் இருந்தால் தமிழகத்தில் போட்டியிட்டு, டெபாசிட் வாங்கி காட்டட்டும் என சிபிஎம் மாநில செயலாளர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வரலாற்று வெற்றியை பெறும்: பாஜக தேசிய தலைவர்கள் தைரியம் இருந்தால் தமிழகத்தில் போட்டியிட்டு டெபாசிட் வாங்கி காட்டட்டும் - சிபிஎம் பாலகிருஷ்ணன் பேட்டி.
கிருஷ்ணகிரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் நிதியளிப்பு மற்றும் அரசியல் விளக்க பேரவை கூட்டம் ஒசூர் தனியார் மண்டபத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்றார்..
முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பாலகிருஷ்ணன் பேசியபோது: தமிழகத்தில் பாஜக வேரூன்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து, ஆளுங்கட்சி நாங்கள் என்கிற வகையில் நாடகமாடி வருகிறார்கள். அநாகரிகமாக விமர்சிக்க கூடிய தலைவராக நாகரிகம் இல்லாமல் அண்ணாமலை பேசி வருகிறார், இவர்களுக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்.. மோடி வந்து சென்றால் தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிடும் என நினைக்கிறார்கள்.. தைரியம் இருந்தால் அகில இந்திய பாஜக தலைவர்கள் தமிழகத்தில் போட்டியிட்டு டெபாசிட் வாங்கிக்காட்டட்டும் என்றதுடன் திமுக கூட்டணியில் சிபிஐ,சிபிஎம் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்தது., விசிக, காங்கிரஸ் கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு முடிவடைய உள்ளது. திமுக, கூட்டணி பங்கீட்டை சுமுகமாக முடிக்கும்.
கூட்டணியில் எவ்வித சச்சரவும், சலசலப்பும் இல்லை திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டில் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்ய இருக்கிறது.. பாஜக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்றார்.. கர்நாடகாவிலும் இந்திய கூட்டணி மகத்தான வெற்றியை பெற வேண்டும்.. காங்கிரஸ் அரசு மேகதாதுவில் அணைக்கட்டியே தீருவோம் நிதி ஒதுக்கீடு செய்கிறோம் என பேசுவது சரியில்லை. இது உச்சநீதிமன்ற தீர்ப்பை உதாசினப்படுத்தும் போக்கு வேண்டாம். தமிழக அரசின் அனுமதியின்றி மேகதாதுவில் எந்த பணியையும் தொடங்க முடியாது என்றார்