தண்ணீர் இன்றி பறவைகள் கவனிக்குமா மாவட்ட நிர்வாகம்!
தண்ணீர் இன்றி சுற்றித்திரியும் பறவைகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை நடவடிக்கை எடுப்பார்களா? சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கேள்வி? தமிழகத்திலேயே 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருப்பது புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களால் கட்டப்பட்ட அரண்மனை 1972 ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் உள்ள மூலிகை நிறைந்த மரம் செடி, கொடிகள் ஏராளமானவை உள்ளது சுகாதாரமான காற்று சுவாசிக்கவும் உள்ள இடமாகும். அதேபோல் தேசிய பறவை மயில் மற்ற பறவை இனங்களாக குயில், தவிட்டுக்குருவி, கிளி, பாம்புகள், பல்லிகள் என்னும் எண்ணற்ற பறவை இனங்கள் வசித்து வருகின்றது. நாளுக்கு நாள் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அலுவலக வளாகத்தில் உள்ள குடிநீர் குழாய்களில் கீழே தேங்கி கிடக்கும் தண்ணீரை பருகி உயிர் வாழ்கின்றன போதுமான தண்ணீர் வசதி மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் ஏற்படுத்தி பறவைகளின் தாகம் தீர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அலுவலகத்தை சுற்றியுள்ள மரம் செடி, கொடிகள் தற்போது காய்ந்த நிலையில் இருக்கிறது ஆங்காங்கே தரை தொட்டிகள் அமைத்து லாரி மூலம் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி வைத்தால் மரம் செடி கொடிகளுக்கும் பறவை இனங்களுக்கும் நன்றாக இருக்கும். இது குறித்து இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் தளபதி நமது செய்தியாளரிடம் தெரிவிக்கையில் மன்னர் காலத்தில் இருந்து பராமரிக்கப்பட்டு வந்த இந்த இடமானது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது ஆனால் அதிகாரிகள் யாரும் பாராமுகமாக இருந்து வருகிறது 3 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை உயர் நீதிமன்ற கிளைகள் வழக்கு தொடர்ந்து இதற்கு தீர்வு காணப்பட்டது ஆனால் தற்போது ஆட்சியாளர்கள் இதனை கண்டு கொள்ளவில்லை ஆகவே இது போன்ற வாயில்லா ஜீவன்கள் காக்க வேண்டும் . தற்பொழுது கோடையை வெயிலால் வாயில்லா ஜீவன்கள் பாதிக்கப்படுகிறது உடனடியாக ஆட்சியாளர்கள் தகுந்த ஏற்பாடு செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.