திருமருகல் ஒன்றிய அலுவலக வளாகத்தில் மின்கம்பம் சீரமைக்கப்படுமா?
புதர் மண்டியுள்ள மின்கம்பம்
திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதர் மண்டி கிடக்கும் மின்கம்பம் சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
புதர் மண்டி ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம் நாகை மாவட்டம் திருமருகலில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை சுற்றி மகளிர் திட்ட அலுவலகம், தீயணைப்பு நிலையம், வேளாண்துறை அலுவலகம்,கால்நடை மருத்துவமனை உள்ளது.இந்த அலுவலகங்களுக்கு ஒன்றிய பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அன்றாடம் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வள்ளுவர் தெரு செல்லும் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் அழுத்த மின்கம்பம் ஒன்றை சுற்றி மரம்,செடி,கொடி,புதர் மண்டி கிடைக்கிறது.
மேலும் செடி, கொடிகள் வளர்ந்து மின் கம்பிகளில் படர்ந்து கிடப்பதால் காற்று வீசு நேரங்களில் மின்தடை ஏற்படுகிறது. மழைக்காலங்களில் செடி கொடிகள் மின்கசிவு ஏற்பட்டு மின் விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலையில் உள்ளது இதனால் அவளையே செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.
நடவடிக்கை இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு மின்கம்பத்தை சுற்றியுள்ள மரம், செடி கொடிகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.