செய்யாறு அருகே காவல்துறை அலுவலகம் அகற்றப்படுமா?
காவல் அலுவலகம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் வட்டத்தில் உள்ளது தூசி கிராமம். தூசி கிராமத்தில் நூற்றாண்டை கிடந்த பழமையான காவல்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அலுவலகம் செயல்பட்ட கட்டிடம் பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து கட்டிடத்தின் மீது மரங்கள் முளைத்து காணப்படுகிறது. மேலும் சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்ந்து வருகிறது இதனால் அவ்வப்போது குடிமகன்களிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிகிறது.
மேலும் அருகிலேயே உள்ள கழிப்பறை கட்டிடமும் பயன்பாட்டுக்கு வராமலேயே மோசமான நிலையில் உள்ளது. பேருந்து நிறுத்தம் பின்புறம் உள்ள பகுதியில் சிதிலமடைந்த அடைந்த கட்டிடத்தால் பயணிகள் அச்சத்துடன் நின்று செல்லும் நிலையே காணப்படுகிறது இடிந்து விழுந்து பாதிப்பு ஏற்படும் முன் உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து கட்டிடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து வெம்பாக்கம் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி யிடம் கேட்டபோது பழமையான சிதலமடைந்த காவல்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை செயல்பட்ட கட்டிடத்தை ஆய்வு செய்து சிதிலமடைந்து இருந்தால் கட்டிடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.