நிலக்கடலை சாகுபடிக்கு மழை விட்டு கொடுக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

நிலக்கடலை சாகுபடிக்கு மழை விட்டு கொடுக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

மார்கழி பட்டம் நிலக்கடலை சாகுபடிக்கு மழை விட்டு கொடுக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

மார்கழி பட்டம் நிலக்கடலை சாகுபடிக்கு மழை விட்டு கொடுக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் மார்கழி பட்டம் நிலக்கடலை சாகுபடிக்கு மழை விட்டுக்கொடுக்குமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். தஞ்சை டெல்டா மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை தொடங்கி தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் வரை பெய்த மழையால் வெள்ள சேதங்கள் ஏற்பட்டது. ஆனால் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் இன்னும் நிரம்பவில்லை. வழக்கம் போல் நடைபெறும் ஒரு போக சம்பா சாகுபடியும் நடைபெறவில்லை. வயல்வெளிகள் தரிசாக கிடக்கிறது. நெல் சாகுபடி கைவிட்டு போன நிலையில் மார்கழி பட்டம் நிலக்கடலை சாகுபடியை நம்பி இருந்த விவசாயிகள் மத்தியில் தற்போது பெய்த மழையால் வயல் வெளி முதல் தென்னந்தோப்புகள் வரை இன்னும் தண்ணீர் வடியவில்லை. தற்போது நிலவும் மேலடுக்கு சுழற்சியால் மீண்டும் டெல்டா மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேதுபாவாசத்திரம் கடைமடை விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முழுமையாக நெல் சாகுபடி செய்ய முடியாத நிலையில், பெரும்பாலான மேட்டுப்பகுதிகளில் விவசாயிகள் பணப்பயிராகிய நிலக்கடலை சாகுபடியை அதிகளவில் செய்து வந்தனர். மார்கழி பட்டம் நல்ல மகசூல் கிடைக்கும் என்பதால் கார்த்திகை, மார்கழி மாதங்களில் நிலக்கடலை சாகுபடி செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பருவம் தவறி பெய்து வரும் மழையால் நிலக்கடலை சாகுபடி செய்யக்கூடிய பகுதிகள் அனைத்தும் இன்னும் ஈரப்பதம் அதிகமாகவே உள்ளது. தொடர்ந்து 15 நாட்கள் வெயில் அடித்தால் தான் நிலக்கடலை சாகுபடி செய்யும் அளவிற்கு தரையில் ஈரப்பதம் பக்குவமடையும். ஆனால் மழை தொடர்ந்து பெய்து வருவதால் இந்த ஆண்டு மார்கழி பட்டம் நிலக்கடலை சாகுபடிக்கு மழை விட்டு கொடுக்குமா? என சேதுபாவாசத்திரம் கடைமடை விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags

Next Story