ஓரிக்கை சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

ஓரிக்கை சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

தடுப்பு சுவர் இல்லாத பாலம் 

காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் ஓரிக்கை பகுதியில் சாலை ஓரம் உள்ள தடுப்பு சுவரை உயர்த்தி அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை வழியாக, பல்வேறு ஊர்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், ஓரிக்கை பழைய காலனி அருகில், இச்சாலையின் குறுக்கே மழைநீர் செல்லும் சிறுபாலம் உள்ளது.

வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில் உள்ள, சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவரின் உயரம் மிகவும் குறைவாக உள்ளது. இதனால், இச்சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள்,

சிறுபாலம் பகுதியில், சாலையோரம் ஒதுங்கும்போது, நிலைதடுமாறி தடுப்புச்சுவர் உயரம் குறைவாக உள்ள பகுதி வழியாக கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில்,

சாலையோரம் உள்ள சிறுபாலத்தின் தடுப்புச்சுவரை உயர்த்தி கட்ட நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story