குடிநீர் தேவை பூர்த்தியாக கூடுதல் சுத்திகரிக்கப்பட்ட நிலையம் அமையுமா?

குடிநீர் தேவை பூர்த்தியாக கூடுதல் சுத்திகரிக்கப்பட்ட நிலையம் அமையுமா?

குடிநீர்

கோடைக்காலம் கூடுதலாக 3,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்தால், குடிநீர் பற்றாக்குறை தீரும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது சின்னம்மாபேட்டை ஊராட்சி. இங்கு 15,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிவாசிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் 5 ஆண்டுகளுக்கு முன் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் 5 லட்சத்து 50,000 ரூபாய் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது. தற்போது இந்த நிலையம் அருகே 300 அடி ஆழத்தில் போர் போடப்பட்டு நீர் சுத்திகரிக்க 5 எச்.பி., மற்றும் 1 எச்.பி., மோட்டார் அமைக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாயிலாக குடிநீர் டேங்கிற்கு ஏற்றப்பட்டு பகுதிவாசிகளுக்கு தினமும் 2 குடம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தற்போது 1,000 லிட்டர் கொள்ளவு கொண்ட டேங்க் பயன்பாட்டில் உள்ளது. தற்போது மக்கள் தொகை அதிகரித்துள்ளதுடன் கோடைக்காலம் என்பதால், குடிநீர் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் பலரும் குடிநீரின்றி அவதிப்படுகின்றனர். இந்நிலையில் கூடுதலாக 3,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்தால், குடிநீர் பற்றாக்குறை தீரும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story