திருவாலங்காடு தேரடி-ரயிலடி பேருந்து சேவை இயக்கப்படுமா?
பேருந்து சேவை
திருவாலங்காடு தேரடி -ரயிலடி வரை பேருந்தை இயக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு சுற்றுவட்டார கிராமங்களான பழையனுார், வீரராகவபுரம், புளியங்குண்டா, கூடல்வாடி, வேணுகோபாலபுரம் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் வேலைக்காக புறநகர் ரயில் வாயிலாக சென்னை, திருவள்ளூர், அரக்கோணம் செல்ல அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து, 5-10 கி.மீ., துாரமுள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்திற்கு தினமும் வந்து செல்கின்றனர். அப்படி வரும் மக்கள் ஆட்டோ வாயிலாகவும் இருசக்கர வாகனத்தில் வருவோரிடம் 'லிப்ட்' கேட்டும் சென்று வருகின்றனர். அதேபோன்று ரயில் நிலையம் அருகே வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பி.டி.ஓ., அலுவலகம், வேளாண் அலுவலகம், மேல்நிலைப்பள்ளி மற்றும் காவல் நிலையம் செல்ல தேரடிக்கு வரவேண்டி உள்ளது. மக்கள் அதிக போக்குவரத்து உள்ள இந்த பகுதியில் அரசு பேருந்து சேவை இல்லாததால், சில ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக மக்கள் புலம்புகின்றனர். இந்நிலையில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காலை, 4:00 மணி முதல் இரவு 12:00 மணி வரை திருவாலங்காடு தேரடி -ரயிலடி வரை பேருந்தை இயக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Next Story