திண்டுக்கலில் ஜன்னல் கம்பியை உடைத்து நகைகள் கொள்ளை

திண்டுக்கலில் ஜன்னல் கம்பியை உடைத்து நகைகள் கொள்ளை

காவல் நிலையம்

திண்டுக்கல் நாகல்நகர் ராஜலட்சுமி நகர் 1வது தெருவில் வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து 47 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் நாகல்நகர் ராஜலட்சுமி நகர் 1வது தெருவில் வசித்து வருபவர்கள், ரங்கேஷ் (65) - வசந்தி (59) தம்பதியர்.இவர்கள் இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், வீட்டின் காம்பவுண்ட் சுவரை தாண்டி குதித்து அறையின் ஜன்னல் கம்பியை உடைத்து வீட்டின் உள்ளே புகுந்தள்ளனர்.

இதையடுத்து பீரோவில் இருந்த ரூ 15 லட்சம் மதிப்புள்ள 47 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். தூங்கி எழுந்துபின் வசந்தி அறைக்குச் சென்று பார்த்துள்ளார் அப்போது, பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்,

நகை திருடுபோனதை உணர்ந்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story