மது எடுப்பு விழா

ஶ்ரீ செல்லியம்மன் ஸ்ரீ.அகோர வீரபத்திரர் சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு மது எடுப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் அருகே கருக்காகுறிச்சி ஶ்ரீ.செல்லியம்மன் ஸ்ரீ.அகோர வீரபத்திரர் சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு மது எடுப்பு விழா நடைபெற்றது. இதில் 1000 கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று கும்மியடித்து நல்ல மழை பெய்ய வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் சுவாமி தரிசனம் செய்து மது குடங்களை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் தாலுகா வீரக்குடி நாட்டைச் சேர்ந்த கருக்காகுறிச்சியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ.செல்லியம்மன் ஸ்ரீ.அகோர வீரபத்திரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதனை முன்னிட்டு இன்று கருக்காக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கரு.வடதெரு, கரு.தெற்க்கி தெரு, பட்டத்திக்காடு, காளகொள்ளை, வாணக்கன்காடு பெரியாவிடுதி, கண்ணியான் கொல்லை வாண்டான் விடுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1000 கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று கும்மியடித்து குலவையிட்டு நல்ல மழை பெய்ய வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் சுவாமி தரிசனம் செய்து தென்னம்பாலை நெல் உள்ளிட்டவைகளை மது குடங்களில் வைத்து பூக்களின் மூலம் அலங்கரித்து மேளத்தாள இசை முழக்கத்தோடு தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்று நொண்டி அய்யனார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து ஸ்ரீ. செல்லியம்மன் அகோர வீரபத்திரர் கோயிலை நோக்கி எடுத்துச் சென்றனர்.இந்நிகழ்ச்சி 1000கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story