மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி !
கிரிக்கெட் போட்டி
கள்ளக்குறிச்சியில் மாவட்ட அளவிலான மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடந்ததையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, கேடயம் பரிசு வழங்கினர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான 15 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது. மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆர்.கே.எஸ். கல்லுாரி, டி.எஸ்.எம். ஜெயின் பொறியியல் கல்லுாரி மைதானங்களில் கடந்த ஜனவரி 18 முதல் மார்ச் 10ம் தேதி வரை சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் போட்டிகள் நடந்தது. பள்ளி மாணவர்களுக்கிடையே விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்காக நடந்த போட்டிகளில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளி. ஆர்.கே.எஸ் மாஸ்டர்ஸ் பள்ளி, ஆக்ஸாலிஸ் சி.பி.எஸ்.இ., பள்ளி, சின்னசேலம் இ.சி.ஆர்., இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளி, திருக்கோவிலூர் ஸ்ரீசாரதா வித்யாஸ்ரமம் பள்ளி, ஸ்ரீசிக்க்ஷா கேந்த்ரா பள்ளி, சங்கராபுரம் செயின்ட் ஜோசப் பள்ளிகளை சேர்ந்த மாணவர் அணியினர் பங்கேற்றனர். லீக் முறையில் நடந்த போட்டிகளில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. மெட்ரிக் பள்ளி அணி முதலிடமும். ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளி அணி இரண்டாம் இடமும் பிடித்து வெற்றி பெற்றன. தொடர்ந்த நடந்த பரிசளிப்பு விழாவிற்கு, ஆர்.கே.எஸ். கல்வி நிறுவன தலைவர் மகுடமுடி, செயலாளர் கோவிந்தராஜி, டி.எஸ்.எம். கல்வி நிறுவன செயலாளர் அசோக்குமார் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, கேடயம் பரிசு வழங்கினர்.
Next Story