முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வாழத்து

முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வாழத்து

விழாவில் மாவட்ட ஆட்சியர்


வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை மருத்துவ கல்லூரியில் 2023-24 ஆம் ஆண்டிற்கான இளங்கலை மருத்துவ படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்கள் சேர்க்கை நடைபெற்று முடிந்துள்ளது. முதலாம் ஆண்டு இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியர்களை வரவேற்கும் விதமாக மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன், மருத்துவ மாணவ மாணவியர்களுக்கு வெள்ளை நிற அங்கியை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் உலக உடற்கூறியியல் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் அனுசரிக்கப்படுவதை தொடர்ந்து, 15.10.2023 அன்று நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

Tags

Next Story