உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ஒரு லட்சத்து 30 ஆயிரம் - பறக்கும் படை பறிமுதல்
பறக்கும் படை பறிமுதல்
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை பறக்கும் படை பறிமுதல் செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு செய்ததை தொடர்ந்து,தேர்தல் நடத்த விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதன் அடிப்படையில் பொதுமக்கள், வியாபாரிகள் யாராக இருந்தாலும், ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேலாக உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லக்கூடாது. ஒரு சில வியாபாரிகள், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பை அறியாமலும், அலட்சியம் காரணமாகவும் வழக்கம் போல் அவர்கள் வியாபாரம் மற்றும் பல்வேறு தொழில் நிமித்தமாக செல்லும்போது, தேவையான பணத்தை எடுத்துச் செல்கின்றனர். ஆனால், தேர்தல் ஆணையம் அறிவிப்பு படி, பறக்கும் படையினர் ஆங்காங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் கரூர் மாவட்டம், தென்னிலை காவல் எல்லைக்கு உட்பட்ட, வைரமடை பகுதியில் சோதனை சாவடி அமைத்து அப்பகுதியில் வரும் வாகனங்களை ஆய்வு செய்து வருகின்றனர் பறக்கும் படை அதிகாரிகள். அப்போது, கோவையில் இருந்து கரூர் நோக்கி வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, அதில் ஹேமலதா என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூபாய் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கண்டுபிடித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலக தேர்தல் துணை வட்டாட்சியரிடம் பணத்தை ஒப்படைத்தனர். மேலும், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு, பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என ஹேமலதாவிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் வந்தவுடன் அரவக்குறிச்சி எல்லைக்குட்பட்ட தென்னிலை பகுதியில் ரூபாய் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பிடிபட்டது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story