இடுப்பளவு தண்ணீரில் உடலை சுமந்து சென்ற அவலம்
உடலை சுமந்து சென்ற அவலம்
இடுப்பளவு தண்ணீரில் உடல்களை தகனம் செய்வதற்கு கொண்டு சென்றனர்.
தென்காசி மாவட்டம் லட்சுமிபுரம் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த மக்கள் ஒருவர் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய குளத்தின் கரையை பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த இறந்த மாடத்தி என்பவர் உடலை குளத்தின் வாய்க்காலில் இடுப்பளவு தண்ணீரில் அப்பகுதி பொதுமக்கள் சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது. எரியூட்டப்படும் பகுதியிலும் தண்ணீர் தேங்கி நின்றதால் சிரமப்பட்டு வேறு இடத்தில் எரியூட்டினர்.
உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு லட்சுமிபுரம் கிராம பொது மக்களுக்கு குளத்து கரையில் பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
Tags
Next Story