மதுபாட்டில் கடத்திய பெண் கைது

மதுபாட்டில் கடத்திய பெண் கைது
கைது செய்ப்பட்ட பெண் மற்றும் மதுபாட்டில்கள்
விழுப்புரம் மாவட்டம்,அரியூர் பகுதியில் மதுபாட்டில் கடத்திய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் ஜி.அரியூர் கிராமத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். உடனே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிறுவன் உள்பட 2 பேர் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த பெண் வைத்திருந்த சாக்கு மூட் டையை பிரித்து பார்த்தபோது அதில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

மொத்தம் 160 மதுபாட்டில்கள் இருந்தன. இதையடுத்து அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் காடகனூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மனைவி மல்லிகா (வயது 40) என்பதும், மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்தவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், உடன் வந்தவர் 15 வயது சிறுவன் என்பதும், பள்ளி மாணவர்களான இவர்கள் உதவியோடு புதுச்சேரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை விற்பனைக்காக கடத்தி வந்தபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து மல்லிகாவை கைது செய்த போலீ சார் அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக் கும் என கூறப்படுகிறது. மேலும் தப்பி ஓடிய 2 மாணவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags

Next Story