அழகு நிலையத்தில் நகை திருடிய பெண் கைது

X
பைல் படம்
சேலம் அருகே சூரமங்கலத்தில் அழகு நிலையத்திற்கு வந்த பெண்ணின் நகையை திருடியவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் மெய்யனூர் பகுதியைச் சேர்ந்தவர் நித்யா (வயது 32), இவர் சூரமங்கலத்தில் அழகு நிலையத்திற்கு சென்றார். அப்போது அவர் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் சங்கிலி காணாமல் போனது. இதுதொடர்பான புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவையில் நடந்த திருட்டு வழக்கில் பிடிபட்ட பெண், சேலம் அழகு நிலையத்தில் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. அந்த பெண்ணிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
Next Story
