பஸ் பயணிகளிடம் நகை திருடிய பலே கில்லாடி பெண் கைது!
வேலூர் பயணிகளிடம் தொடர்ந்து நகை திருடி வந்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
வேலூர் பயணிகளிடம் தொடர்ந்து நகை திருடி வந்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
வேலூர் பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஏராளமான பயணிகள் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணம் செய்கின்றனர். அவ்வாறு பயணிக்கும் பயணிகளை குறித்து மர்மநபர்கள் நகை, பணப்பை உள்ளிட்டவற்றை திருடி உள்ளனர். அவர்கள் பயணிகளுடன் பயணிகளாக பயணித்து கைவரிசை காட்டி வந்துள்ளனர். இதுதொடர்பாக வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு புகார்கள் வந்தது. மாவட்ட எஸ்பி மணிவண்ணன் உத்தரவின்பேரில் மர்மநபர்களை போலீசார் தேடி வந்தனர். அவர்கள் புகார் கொடுத்தவர்கள் பயணித்த பகுதி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு செய்தனர். அதில் ஒரு பெண் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் வடக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த ஒரு பெண்ணை மடக்கி விசாரணை செய்தனர். அதில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியை சேர்ந்த சுதன் என்பவரின் மனைவி பாரதி (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 33 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story