கடனை கட்ட சொல்லி வற்புறுத்தியதால் பெண் தற்கொலை முயற்சி

கடனை கட்ட சொல்லி வற்புறுத்தியதால் பெண் தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி 

குடியாத்தம் பகுதியில் கடனை வங்கி அதிகாரிகள் வற்புறுத்தியதால் பெண் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர் கேட் அருகே உள்ள கள்ளூர் மதுராம்பிகை நகரை சேர்ந்தவர் லாரி டிரைவர் ஷபியுல்லா. இவரது மனைவி ஷாகிராபானு (42). மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக உள்ளார். இவர் நிதி நிறுவனங்கள், தனியார் வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

அந்த கடனை கட்ட சொல்லி நிறுவனத்தின் ஊழியர்கள் அடிக்கடி ஷாகிராபானு வீட்டிற்கு வந்து வற்புறுத்தி உள்ளனர். நேற்று கடன் வசூலிக்க வந்த வங்கி ஊழியர்கள் ஷகீராபானுவை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே தனியார் வங்கி ஊழியர்கள் சித்தூர்கேட் உள்ளிட்ட பகுதிகளில் கடன் வாங்கிய பெண்களிடம் கடன் கட்டச் சொல்லி அச்சுறுத்துவதாகவும், அவதூறாக பேசுவதாகவும் ராஷ்டிரிய உலமா கவுன்சிலின் தேசிய பொதுச்செயலாளர் இஸ்மாயில் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவமனையில் திரண்டனர்.

தகவல் அறிந்ததும் குடியாத்தம் டி.எஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில போலீசார் மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.அதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story