கடல் அலையில் சிக்கி பெண் உயிரிழப்பு

கடல் அலையில் சிக்கி பெண் உயிரிழப்பு

கவுசல்யா

தேங்காய்பட்டணம் கடலில் அலையில் சிக்கி பெண் உயிரிழப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே ஆனந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம்.இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு கவுசல்யா என்ற மனைவியும், இரண்டு ஆண் பிள்ளைகளும் உள்ளனர். சம்பவத்தன்று கவுசல்யா தேங்காப்பட்டணத்தில் கடல் தண்ணீர் எடுப்பதற்காக சென்று உள்ளார்.அப்பொழுது திடீரென எழும்பிய கடலலை இவரை இழுத்துச்சென்றது. இவரது அபயகுரல் கேட்டு, அங்கிருந்த மீனவர்கள் ஓடி சென்று அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், குளச்சல் கடலோர காவல்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story