நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்த பெண் விஷம் குடித்து தற்கொலை.
தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த குப்பம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு. இவருடைய மனைவி சரத்குமாரி (27).செய்யார் அடுத்த கூலமந்தல் கிராமத்தை சேர்ந்தவர் இவர்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. சரத்குமாரி, தன்னுடைய தாய் ஊரான கூழமந்தல் கிராமத்தில் இருக்கும் மக்களிடம் பணத்தை வசூல் செய்து செய்யாறு ஏ.பி.ஆர் நிதி நிறுவனத்தில் தீபாவளி சீட்டிற்கு கட்டியிருந்ததாகவும், சில மாதங்களாக அந்த நிறுவனத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு அந்த நிறுவனம் மூடபட்டதை அறிந்த கிராம மக்கள் சரத்குமாரியிடம் கட்டிய பணத்தை கேட்டு பிரச்சனை செய்து வந்தனர்.
இதனால் மன உளைச்சல் அடைந்த சரத்குமாரி தனது கணவர் வீட்டில் யாருக்கும் தெரியாமல் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து வாந்தி எடுத்துள்ளார். இதை பார்த்த கணவர் பாபு அவரை உடனடியாக சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிசிச்சைக்காக சேர்த்து அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சரத்குமாரி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்இரவு உயிரிழந்தார். இது குறித்து சரத்குமாரியின் சகோதரி சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்தார். இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.