கள்ளக்காதலனுடன் தகராறு - பெண் தற்கொலை
பெண் தற்கொலை
திருப்பூர் மாவட்டம், கல்லாங்காட்டு பகுதியை சேர்ந்த பெண் கள்ளாகாதலனுடன் ஏற்பட்ட தகரற்றால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில் உப்பு பாளையம் ரோடு, கல்லாங்காட்டு வலசு 2வது வீதியைச் சேர்ந்தவர் ராமாயி வயது 52. இவருடைய கணவர் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் ராமாயிக்கு அதே பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி மணி 40 என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இவர்கள் இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் பணப்பிரச்சனையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ராமாயி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெள்ளகோவில் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story