வயிற்று வலியால் பெண் தற்கொலை

வயிற்று வலியால் பெண்  தற்கொலை

தற்கொலை 

வந்தவாசி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி மூர்த்தியம்மாள். ஆறுமுகம் இறந்து விட்டதால்,தங்கை அஞ்சலை வீட்டில் மூர்த்தியம்மாள் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

மன விரக்தியடைந்த மூர்த்தியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்த புகாரின்பேரில், வந்தவாசி வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story