அடிக்கடி குடும்ப தகராறு- விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.

அடிக்கடி குடும்ப தகராறு- விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.

குடும்ப தகராறால் பெண் தற்கொலை

அரவக்குறிச்சி அருகே,அடிக்கடி குடும்ப தகராறு- விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சேந்தமங்கலம், ஆர். புதுப்பட்டி அருகே உள்ள காமாட்சிபுரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ் மனைவி திவ்யபாரதி வயது 24. இவர்கள் இருவருக்கும் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், பொன்ராஜுக்கும் திவ்யபாரதிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம்.

இதனால், விரக்தி அடைந்த திவ்யபாரதி நவம்பர் 30ஆம் தேதி மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் வேலைக்கு சென்று இருந்த பொன்ராஜ் வீடு திரும்பியதும், தனது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சிடைந்தார். மேலும், இது குறித்து அரவக்குறிச்சி காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த திவ்ய பாரதியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக டிசம்பர் ஒன்றாம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags

Next Story