மன உளைச்சலில் பெண் தற்கொலை 

மன உளைச்சலில் பெண் தற்கொலை 
பெண் தற்கொலை 
கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் அருகே மன உளைச்சலில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் அருகே சமாதானபுரத்தை சேர்ந்தவர் ராஜபாண்டி என்பவர் மனைவி வசந்தா (57).இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாகவும், மருமகள் அருகில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

இதனால் வசந்தா தனியாக ஒரு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வசந்தாவுக்கு குடலிறக்க பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் வசந்தா கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வசந்தா வீடு வெகு நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதையடுத்து அருகில் வசிக்கும் அவரது மருமகள் அங்கு சென்று பார்த்துள்ளார். கதவைத் தட்டியும் உரக்கக் குரல் கொடுத்தும் உள்ளே இருந்து எந்த சலனமும் இல்லை. இதற்கிடையே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, உள்ளே சேலையில் தூக்கு போட்டு மயங்க நிலையில் வசந்தா காணப்பட்டுள்ளார்.

உறவினர்கள் அவரை மீட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வசந்தா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story