பெண் தற்கொலை - கோட்டாட்சியர் விசாரணை
தற்கொலை
வேலூர் மாவட்டம் ,ஒடுகத்தூரை அடுத்த வரதலம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட வெண்ணிலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் சசிகுமார் (வயது 37). இவரது மனைவி லாவண்யா (34). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. ஒருவயதில் ஆண் குழந்தை உள்ளது. சசிகுமாருக்கும், அவரது மனைவிக் கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில், இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சசிகுமார், லாவண்யாவை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லாவண்யா வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த கணவன் சசிகுமார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவம்னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.