குடும்ப தகராறில் பெண் தற்கொலை
பெண் தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் , பணகுடியை சேர்ந்த ராஜேஷ் (30) என்பவருக்கும் வள்ளியூரை சேர்ந்த இந்து (25) என்பவருக்கும் கடந்த 2018ல் திருமணம் நடைபெற்று 2 பெண் குழந்தைகள் உள்ளது.கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது உண்டு.
இதற்கிடையே நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் இந்து விஷமருந்தி வள்ளியூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இந்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story