நகை, பணம் மோசடி செய்ததாக பெண் புகார்

நகை, பணம் மோசடி செய்ததாக பெண் புகார்

நாகர்கோவில் போலீஸ் எஸ் பி அலுவலகத்தில் நகை, பணம் மோசடி செய்ததாக பெண் புகார் ஒருவர் புகார் அளித்துள்ளார். 

நாகர்கோவில் போலீஸ் எஸ் பி அலுவலகத்தில் நகை, பணம் மோசடி செய்ததாக பெண் புகார் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையை அடுத்து குருசு விளை பகுதியை சேர்ந்தவர் சகாய ஜெகன் என்பவர் மனைவி கிளாடிஸ் அனுஜா. இவர் நேற்று நாகர்கோவில் எஸ் பி அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். நான் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கிறேன். இனயம் புத்தன் துறை பஸ்ஸில் நான் தினமும் பயணம் செய்வது வழக்கம். அப்போது சுசீந்திரம் அங்கன்வாடியில் வேலை பார்ப்பதாக ஒரு பெண் எனக்கு அறிமுகமானார். அவர் கருங்கல் பகுதியை சேர்ந்தவர்.

இந்நிலையில் எனக்கு உடல்நிலை குறைவு காரணமாக நான் வேலைக்கு செல்லவில்லை. பின்னர் என்னை பார்த்த அந்த பெண் உனக்கு யாரோ மந்திரவாதம் செய்து உள்ளார்கள். அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் இல்லை என்றால் உங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு உயிர் போய்விடும் என்று கூறினார். பேச்சிப்பாறையில் அவர்களுக்கு தெரிந்த ஒருவர் ஒரு மந்திரவாதி இருப்பதாகவும் அவரை வைத்து சரி செய்து விடலாம் எனவும் கூறினார். இதற்காக ஒரு பவன் தங்க நகை மற்றும் ரூ. 3.60 லட்சம் இரண்டு தவணையாக தான் கொடுத்தேன்.

பின்னர் நரபலி கொடுக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார். இதை என் கணவரிடம் தெரிவித்தேன். என்னை நம்ப வைத்து மோசடி செய்த மந்திரவாதி மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த பெண் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story