மோசடி புகாரில் சிக்கிய பெண் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
மாவட்ட காவலர் அலுவலகம்
தர்மபுரி மாவட்டம், லளிகம் கிராமத்தைச் சேர்ந்த புண்ணாக்கு வியாபாரி பழனிசாமி, வெண்ணாம் பட்டியைச் சேர்ந்த சாந்த மூர்த்தி மற்றும் அரூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ அங்கப்பன் ஆகிய மூவரும், கடந்த 12ம் தேதி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், டிஎஸ்பி சிவராமனிடம் புகார் மனு அளித்தனர்.
அதில், தர்மபுரி சரகத்திற்கு உட்பட்ட அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் ஏட்டு அடமானத்தில் உள்ள அவது வீட்டை மீட்பதற்காக, 3 பேரும் வங்கி மூலமும், நேரில் பணமாகவும் 38 லட்சத்தை கொடுத்தோம். ஆனால், அவர் வீட்டை கிரயம் செய்து தருவதாக கூறி ஏமாற்றியதோடு, பணத்தை திருப்பி தராமல் வேறு நபருக்கு வீட்டை விற்க முயற்சி செய்து, பணத்தை கேட்ட எங் களுக்கு மிரட்டல் விடுக்கிறார் என கூறியிருந்தனர்.
இந்த புகாரின் மீது, டிஎஸ்பி சிவராமன் விசாரணை நடத்தியதன் அடிப்படையில், தர்மபுரி (பொ) எஸ்பியும், சேலம் மாநகர துணை கமிஷனருமான பிருந்தா, முதற்கட் டமாக பெண் ஏட்டு சூர்யாவை, ஆயுதப்படைக்கு இடமாறுதல் செய்து உத்தர விட்டார். தொடர்ந்து, புகார்தாரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்