இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய பெண் உயிரிழப்பு
ஜெனிபா
கேரள மாநிலம் காசிக்குழி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்.இவரது மனைவி ஜெனிபா.குலசேகரம் அருகே கற்றுவா பேணு பகுதியை சேர்ந்தவர்.இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலில் ஈடுபட்டுள்ள ஜெனிபாவுக்கு வேர்கிளம்பியை அடுத்த செட்டிச்சார்விளை பகுதியை சேர்ந்த ஆஷிக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஜெனிபா வேலை தொடர்பான நேர்முகத்தேர்வுக்கு நண்பர் ஆஷிக்குடன் சென்று வருவதாக கணவரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.நேர்முக தேர்வு முடிந்த நிலையில் இரவு பைக்கில் வீடு திரும்பி உள்ளனர்.ஆஷிக் பைக்கை ஓட்டி வந்துள்ளார். திருவட்டார் பகுதியில் வந்தபோது, திடீரென நிலைதடுமாறிய பைக் அருகில் உள்ள வடிகாலில் பாய்ந்தது.இதில் ஜெனிபாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆஷிக் லேசான காயத்துடன் தப்பினார்.
அக்கம் பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு தக் கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஜெனிபா ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சைச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ஜெனிபா இறந்தார். இது பற்றி திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.