காரமடை அருகே பாஜக பிரமுகரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க பெண் கோரிக்கை

காரமடை கெம்மாரம்பாளையத்தில் பாஜக பிரமுகரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் காரமடை கெம்மாரம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் இவரது மனைவி கௌரி. இவர் பாஜக பிரமுகரின் கணவர் மகேந்திரகுமார் என்பவர் தங்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அனைத்து பொருட்களை திருடிச் சென்றதோடு, அடியாட்களை வைத்து மிரட்டி வருவதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இது குறித்து கெளரி கூறுகையில் தனது கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும் கடந்த ஆண்டு மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த மகேந்திரகுமார் என்பவருக்கு சொந்தமான 6.48 ஏக்கர் நிலத்தை வாங்க கிரைய ஒப்பந்தம் பத்திரம் போட்டதாகவும் இதற்கான பணத்தில் பெரும்பாலும் பங்கு கொடுக்கப்பட்டு, அந்த நிலத்தில் தாங்கள் வீடு கட்டி அங்கு தனது உறவினர்கள் இருந்து வரும் நிலையில், நிலத்தை மகேந்திர தங்களுக்கு கிரையம் செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார் என தெரிவித்தார்.

இது குறித்து பல முறை கேட்டும் எந்த பதிலும் அளிக்காமல் தற்போது இடத்தை காலி செய்து கொடுக்குமாறு கேட்டு மிரட்டி வருகிறார் என்றார்.இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் மகேந்திரகுமார் தனது ஆட்களை கொண்டு மிரட்டி வந்ததாகவும்,கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் யாரும் இல்லாத போது அங்கு வந்து அவரது ஆட்களுடன் இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 2 லாரிகளில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களை திருச் சென்றதாக தெரிவித்தார். இது குறித்து அவர் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீஸார் அழைத்து பேசியதால் ஒரு லாரி பொருட்களை மட்டும் ஒப்படைத்த நிலையில் மற்ற பொருட்களை கொடுக்காமல் இழுத்தடிப்பதாகவும், மகேந்திரகுமாரின் மனைவி பிரீத்தி பாஜக நிறுவாகி என்பவதால் அதனை வைத்து தங்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.நிலம் தொடர்பான பிரச்சனை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது அத்துமீறி வீட்டில் உள்ள பொருட்களை திருடுவது மற்றும் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கம்பி போன்ற இரும்பு ஆயுதங்களோடு உலா வருவதாகவும் தங்களது பூட்டிய வீட்டை திறந்து மது குடித்து விட்டு பாட்டில்களை அப்படியே வீசிச் சென்றுள்ளதோடு அடிக்கடி அப்பகுதி சுற்றிவருவதாக தெரிவித்தார்.எனவே மகேந்திரகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Tags

Next Story