சேலத்தில் ஒப்பந்த தொழிலாளர் பலி

X
பலி
சேலத்தில் தண்ணீர் நிரப்பும் பணியின் போது ஒப்பந்த ஊழியர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம், மாமாங்கம் பகுதியை சேர்ந்தவர் முத்து (38). இவர் அந்த பகுதியில் உள்ள பர்ன் அன்கோ நிறுவனத்தில் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் நிரப்பும் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இன்று காலை 10மணியளவில் வேலைக்கு சென்றிருந்த அவர் தொட்டியில் தண்ணீர் நிரப்பிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். அங்கிருந்த ஊழியர்கள் அவரை மீட்டு இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
திடீரென நெஞ்வலி ஏற்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags
Next Story
