பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
பெண் பலி
கயத்தாறு அருகே மகனுடன் மோட்டார் பைக்கில் சென்றபோது, தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி டி.எம்.டி நகரைச் சேர்ந்தவர் அருணாசலம். இவருடைய மனைவி மல்லிகா (60). இவர்களுடைய மகன் அருண்குமார் (30). இவர் சம்பவத்தன்று தனது தாயார் மல்லிகாவுடன் மோட்டார் சைக்கிளில் கயத்தாறு அருகே திருமங்கலகுறிச்சியில் உள்ள கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். கயத்தாறு அருகே சூரியமினிக்கன் விலக்கு பகுதியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்த மல்லிகா தவறி சாலையில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று மல்லிகா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story