அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
தென்காசி அருகே அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி அருகே உள்ள சீவநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரது மனைவி பாலாமணி (வயது 82). இவர் செங்கோட்டையில் இருந்து சீவநல்லூருக்கு அரசு பேருந்தில் பயணம் செய்தார். சீவநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் பஸ் நின்றபோது பஸ்ஸில் இருந்து கீழே இறங்கிய பாலாமணி தவறி கீழே விழுந்து உள்ளார்.
இதை கவனிக்காத டிரைவர் சந்திரசேகரன் பேருந்தை இயக்கி உள்ளார். இதனால் பாலாமணி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இலத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story