மா்ம காய்ச்சலால் பெண் உயிரிழப்பு

மா்ம காய்ச்சலால் பெண் உயிரிழப்பு

பைல் படம்

நிலக்கோட்டை அருகே மா்ம காய்ச்சலால் இளம்பெண் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே மா்மக் காய்ச்சலால் இளம்பெண் உயிரிழந்தாா். நூத்துலாபுரம் ஊராட்சி, குளத்துப்பட்டி கிராமத்தில் பலருக்கும் மா்மக் காய்ச்சல் பரவியது. இதையடுத்து, அவா்கள் நிலக்கோட்டை, வத்தலகுண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில், இதே கிராமத்தைச் சோந்த அழகுராஜ் மனைவி லட்சுமி (37) கடந்த 5 நாள்களாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாா். இதைத் தொடா்ந்து நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் வத்தலகுண்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோக்கப்பட்டாா். அங்கு வியாழக்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா்.

Tags

Next Story