மார்கழி முதல் நாள்.. வண்ண கோலமிட்டு வரவேற்ற பெண்கள்!
மார்கழி
மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் வீடுதோறும் வாசலில் வண்ண கோலமிட்டு பூசணிப்பூ வைத்து அழகு படுத்துவதில் பெண்கள் ஆர்வம். திருவண்ணாமலை அடுத்த மங்கலம்புதூர் கிராமத்தில் மார்கழி மாதம் 1-ம் நாள் இன்று தொடங்கிய நிலையில் வீடுதோறும் வாசலில் தண்ணீர் தெளித்து வண்ண கோலமிட்டு பூசணிப்பூ வைத்து அழகு படுத்துவதில் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மார்கழி மாதத்தில் அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை பச்சஅரசி மற்றும் பல வண்ண கோலம் போட்டு அதில் மாட்டு சாணத்தில் பிள்ளையார் செய்து மஞ்சள் நிறமான பூசணி பூ வைப்பது வழக்கம். மார்கழி மாதம் முதல் தை மாதம் பொங்கல் முடியும் வரை இவற்றை செய்து வருகின்றனர்.
இவ்வாறு காலையில் எழுவதால் சுத்தமான ஆக்சிஜன் சுவாசக்காற்றுகளும் இதன் மூலம் உடல் ஆரோக்கியமும் பல்வேறு நன்மைகளும் கிடைப்பதாகவும் மற்றும் நோய் விலகுவதாகவும். மேலும் முன்னோர்கள் காலத்தில் தங்கள் வீடுகளில் திருமண வயதில் பெண், மகன் இருப்பதை குறிக்கும் விதமாக தங்கள் வீட்டு வாசலில் அதிகாலையில் தண்ணீர் தெளித்து வண்ண கோலமிட்டு சாணத்தில் பிள்ளையார் செய்து அதில் பூசணிப்பூ அல்லது செம்பருத்தி பூ வைப்பதன் மூலம் அவ்வழியாக செல்வது பஜனர்கள் அதனைப் பார்வையிட்டு தகவல் தெரிந்து கொள்வதற்காக இதை வைப்பதாகவும் பெண்கள் தெரிவிக்கின்றனர்.