பாதுகாப்பு கேட்டு பெண் எஸ்பியிடம் மனு அளிப்பு
கன்னியாகுமரி மாவட்டம், கோணங்காடு பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் கென்னடி மனைவி ஆல்பா ஸ்ரீஜா ரோஸ் (40) என்பவர் மாவட்ட எஸ் பி - யிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் இருப்பதாவது, எனது கணவர் அரசு போக்குவரத்து கழகம் குளச்சல் பணிமனையில் கண்டக்டர் ஆக உள்ளார்.
எங்களுக்கும் எங்கள் ஊரைச் சேர்ந்த ஸ்மைல் நிதிஷ் என்பவருக்கும் நிலப் பிரச்சனை இருந்து வருகிறது. கடந்த 20-ம் தேதி எனது கணவர் பணிக்கு சென்று திரும்பும் வேளையில் இரவு 11 மணியளவில் ஸ்மைல் நிதிஷ் எனது வீட்டில் நுழைந்து என்னை தகாத வார்த்தைகள் திட்டி விட்டு சென்றார்.
பின்னர் 21 ஆம் தேதி மீண்டும் எனது வீட்டிற்குள் நுழைந்து எனது கணவரை கம்பியில் தாக்கினார். இதில் எனது கணவரின் இடது தோள்பட்டையில் எலும்பு முறிந்தது. மேலும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றார். எனது கணவர் நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து குளச்சல் போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் போலீசார் இதுவரை அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் எனது குடும்பத்தை அழித்து விடுவதாக கூறுகிறார். எனவே எங்களது குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அணுவில் கூறியுள்ளார்.