சங்கரன்கோவிலில் குடும்ப தகராறு காரணமாக பெண் தூக்கு போட்டு தற்கொலை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அருகன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன், வேல்மயில் தம்பதிக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டையிட்டு கொள்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வேல்மயில் குடும்ப தகராறு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அருகில் இருந்த உறவினர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை கொண்டு வந்தனர். தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வேல்மயில் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அதனால் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என இறந்தவரின் உறவினர்கள் கோரிக்கை. வேல் மயில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சிவகிரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.