குடும்ப பிரச்சினையால் பெண் தூக்கிட்டு தற்கொலை

குடும்ப பிரச்சினையால் பெண் தூக்கிட்டு தற்கொலை
X

மோகனபிரியா 

மண்ணச்சநல்லூரில் குடும்ப பிரச்னையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஜம்புநகரைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி 27 வயதான மோகனப்பிரியா. இவர்களுக்கு திருமணமாகி ஆறு வருடம் 11 மாதங்கள் ஆகின்றது. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.கணவர் மாணிக்கம் கேரளா மாநிலத்தில் டெக்கரேஷன் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக கணவனுக்கு மோகனப்பிரியா போன் செய்துள்ளார். ஆனால் கணவர் போனை எடுக்காததால் அவர்களுக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக இன்று வீட்டில் உள்ள பேன் கொக்கியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் மோகனப்பிரியாவின் தாய் வெண்ணிலா கொடுத்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகிறார்.

Tags

Next Story