குடும்ப பிரச்சனை காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை

குடும்ப பிரச்சனை காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை

பைல் படம் 

எட்டையபுரம் அருகே லட்சுமிபுரம் கிராமத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி இவரது மனைவி முத்துலட்சுமி (38), இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ராமமூர்த்தி அவரது மனைவி முத்துலட்சுமி இடையே கடந்த ஒரு வாரமாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் முத்துலட்சுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் முத்துலட்சுமியின் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Read MoreRead Less
Next Story