கசாப்புக்காரர் தெருவில் பெண் தூக்கிட்டு தற்கொலை

கசாப்புக்காரர் தெருவில் பெண் தூக்கிட்டு தற்கொலை
காவல் நிலையம் 
விருதுநகர் மாவட்டம் கசாப்புக்காரர் தெருவில் பெண் தூக்கிட்டு தற்கொலை தந்தை அளித்த புகார் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை

விருதுநகர் கசாப்புக்காரர் தெருவை சார்ந்தவர் கார்த்திக் இவர் மனைவி சங்கரேஸ்வரி இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் இவர்களுக்கு ஒரு மகன் இருப்பதாக கூறப்படுகிறது.

கார்த்திக் அடிக்கடி குடித்து வருவதால் குடும்பத்தில் சிறு சிறு சண்டைகள் இருந்து வந்ததாகவும், கடந்த 27ஆம் தேதி தனது தாய் வீட்டிற்கு சென்ற சங்கரேஸ்வரி தனது கணவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சம்பளம் குறித்து கேட்டதாகவும் அப்பொழுது கார்த்திக் குடித்திருந்ததாகவும் அது பிரித்து சண்டையிட்டதாகவும் கூறப்படுகிறது.

தொலைபேசியில் கணவரிடம் சண்டையிட்ட சங்கரேஸ்வரி தனது வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற சங்கரேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தந்தை அளித்த புகாரியின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story