கும்மிடிகான்பட்டியில் தேன் பூச்சி கொட்டியதில் பெண் காயம்

கும்மிடிகான்பட்டியில் தேன் பூச்சி கொட்டியதில் பெண் காயம்

கோப்பு படம் 

ஜோலார்பேட்டை அடுத்த கும்மிடிகான்பட்டி பகுதியில் தேன் பூச்சி கொட்டியதில் பெண் மற்றும் மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கும்டிகான்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மனைவி சிந்து (26) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சென்னப்பன் மனைவி நல்வேங்கி (60) இருவரும் வீட்டின் அருகே அமர்ந்திருந்தனர்.

அப்போது வீட்டின் அருகே இருந்த தென்னை மர ஓலையில் தேன்கூடு ஒன்று இருந்தது அப்போது திடீரென காற்று அடித்ததில் தென்னை மரத்தின் ஓலை கீழே விழுந்தது இதன் காரணமாக தேன் பூச்சிகள் பரந்தன. அப்போது வீட்டில் வெளியே அமர்ந்திருந்த சிந்து மற்றும் நல்வேங்கி ஆகிய இருவரையும் தேன் பூச்சிகள் சரமாரியாக கொட்டியதில் முகம் மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் வீக்கங்கள் ஏற்பட்டன.

இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story