திருட்டு வழக்கில் பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

திருட்டு வழக்கில் பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

திருட்டு வழக்கில் பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி பகுதியில் ரயில்வே அதிகாரியின் வீட்டில் திருடிய பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது.

சேலம், கன்னங்குறிச்சி புது ஏரி பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 53). ரெயில்வே அதிகாரி. இவரது வீட்டில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி 7 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது. இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த திருட்டு தொடர்பாக நரசோதிப்பட்டியை சேர்ந்த தமிழ்செல்வி (37) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

இந்த திருட்டு தொடர்பான வழக்கு விசாரணை சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 4-வது கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் நகை, பணம் திருடிய குற்றத்துக்காக தமிழ்செல்விக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு யுவராஜ் தீர்ப்பு அளித்தார்.

Tags

Next Story