கோவையில் சீட்டுப் பணத்தை திருப்பி கேட்ட பெண்ணுக்கு அடி உதை
கோப்பு படம்
கோவை அறிவொளி நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி.அதே பகுதியில் வசித்து வரும் இவரது உறவினர் மகாராஜன் என்பவர் வாராந்திர சீட்டு நடத்தி வருகிறார்.
வாரம் ஒரு முறை குலுக்கல் முறையில் ஏலம் நடத்தப்படும் நிலையில் தனக்கு நெருக்கமானவர்களுக்கு முன்னுரிமை அளித்து சீட்டு பணத்தை மகாராஜன் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.இதனை அடுத்து சுப்புலட்சுமி ஏலச் சீட்டில் இருந்து விலகி கொள்வதாகவும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் செலுத்திய இரண்டு லட்சத்து 32,000 ரூபாயை ரூபாயை திருப்பித் தரும்படி கேட்டுள்ளார்.
சீட்டு முடியும் முன்பு பணத்தை திருப்பி தர முடியாது என மகாராஜன் கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.வாக்குவதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மகாராஜன் சுப்புலட்சுமியை தாக்கியதாக அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மதுக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.